/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் சாலை சேதம்; மக்கள் அவதி
/
கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் சாலை சேதம்; மக்கள் அவதி
கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் சாலை சேதம்; மக்கள் அவதி
கரூர் தெற்கு காந்தி கிராமத்தில் சாலை சேதம்; மக்கள் அவதி
ADDED : டிச 16, 2024 04:03 AM
கரூர்: கரூர், தெற்கு காந்தி கிராமத்தில் சேதமடைந்த சாலையை செப்ப-னிட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர், தெற்கு காந்தி கிராமம் பூங்கா சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும் பலர் வந்து செல்கின்-றனர். மேலும், பள்ளி, கல்லுாரி என, நாள்தோறும் நுாற்றுக்கணக்-கான வாகனங்கள் சென்று வருகின்-றன. காலையும், மாலையும் ஏராளமான வாகனங்கள் சென்று வரு-கின்றன. தற்போது பெய்த மழையால், சாலையில் அரிப்பு ஏற்பட்டு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்-டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவில் டூவீலர்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'எப்போது மழை பெய்தாலும் இந்த சாலையின் மையப்பகுதி குண்டும், குழியுமாக மாறிவிடும். பின், மாநகராட்சி நிர்வாகம் சாலையை செப்பனிடுகின்றனர். எனவே, நிரந்தரமாக இருக்க தர-மான சாலை அமைக்க வேண்டும்' என்றனர்.

