/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே பாலத்தில் சாலை சேதம் உடைந்த சிலாப் கற்களால் அவதி
/
ரயில்வே பாலத்தில் சாலை சேதம் உடைந்த சிலாப் கற்களால் அவதி
ரயில்வே பாலத்தில் சாலை சேதம் உடைந்த சிலாப் கற்களால் அவதி
ரயில்வே பாலத்தில் சாலை சேதம் உடைந்த சிலாப் கற்களால் அவதி
ADDED : ஏப் 27, 2025 04:22 AM
கரூர்: கரூர் - ஈரோடு ரயில்வே வழித்தடத்தில் அரிக்காரன்பாளையம் என்ற இடத்தில், தங்க நாற்கர சாலை அமைக்கும் போது, உயர் மட்ட ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதன் வழியாக நாள்தோறும், ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தில் பல இடங்களில் கான்கீரிட் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சேதம் அடைந்துள்ளது.இதனால், 100 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் செல்லும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், சாலையின் மையப்பகுதியில், சிலாப் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையை கடந்து நடந்து செல்லும் பொது மக்கள், சிலாப் கற்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நின்று, வாகனங்கள் வருகிறதா என கவனித்து விட்டு செல்கின்றனர்.
ஆனால், ரயில்வே பாலத்தில் சாலையின் மையப்பகுதியில், அமைக்கப்பட்ட சிலாப் கற்கள் பல இடங்களில் உடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன், சிலாப்கற்கள் உள்ள மையப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சேதம் அடைந்த சாலைகளை சீரமைத்து, உடைந்த சிலாப் கற்களை மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.