/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை மேம்படுத்தும் பணி: பொறியாளர் ஆய்வு
/
சாலை மேம்படுத்தும் பணி: பொறியாளர் ஆய்வு
ADDED : ஜூலை 02, 2025 02:28 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சியில் நடந்து வரும் சாலை மேம்படுத்தும் பணிகளை, திருப்பூர் வட்ட கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட, தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி வரை உள்ள சாலையை, ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம் 2023-24ம் ஆண்டின் கீழ் அகலப்படுத்தி மேம்படுத்த ஒப்புதல் பெறப்பட்டது. அப்போது காவேரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடந்த காரணத்தால், சாலை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து தார்ச்சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் வட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் விஸ்வநாதன், தாடிக்கொம்பு பகுதியில் இருந்து பள்ளப்பட்டி வழியாக அரவக்குறிச்சி வரை உள்ள சாலை மற்றும் அரவக்குறிச்சியில் இருந்து கோவிலுார் செல்லும் சாலையில், நடந்து முடிந்த சாலைகளின் தரத்தை ஆய்வு செய்தார்.
கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார், அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி, உதவி பொறியாளர் வினோத் குமார் உடன் இருந்தனர்.