நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், வரகூர் முதல் குழந்தைப்பட்டி வரை செல்லும், கிராம சாலை மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, வரகூர் கிராமத்தில் இருந்து குழந்தைப்பட்டி வரை, கிராம சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக பலர் வாகனங்களில் செல்கின்றனர்.
தற்போது தார்ச்சாலையின், பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் செல்லும் போது சிரமப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் செல்லும் போது தடுமாறி விழுகின்றனர். எனவே, கிராம சாலையை புதுப்பிக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

