/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துளசிக்கொடும்பூரில் சாலை புதுப்பிக்கும் பணி மும்முரம்
/
துளசிக்கொடும்பூரில் சாலை புதுப்பிக்கும் பணி மும்முரம்
துளசிக்கொடும்பூரில் சாலை புதுப்பிக்கும் பணி மும்முரம்
துளசிக்கொடும்பூரில் சாலை புதுப்பிக்கும் பணி மும்முரம்
ADDED : நவ 22, 2024 01:40 AM
துளசிக்கொடும்பூரில் சாலை
புதுப்பிக்கும் பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம், நவ. 22-
துளசிக்கொடும்பூர் நெடுஞ்சாலையில். புதிய சாலை அமைக்கும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, துளசிகொடும்பூர் பகுதியில் இருந்து வையம்பட்டி, மைலம்பட்டி நெடுஞ்சாலை செல்கிறது. துளசிக்கொடும்பூர் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள, நெடுஞ்சாலை மோசமாக இருந்தது. இதையடுத்து, புதிய சாலை அமைக்கும் வகையில் நேற்று, கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பழுது பார்த்து புதுப்பிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட உதவி கோட்ட பொறியாளர் கர்ணன் தலைமையில், சாலை தரம் குறித்து நேரில் கள ஆய்வு பணி செய்யப்பட்டது. கிருஷ்ணராயபுரம் உட்கோட்ட உதவி பொறியாளர் அசாரூதீன் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.