/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாங்கல் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் அதிகரிக்கும் வழிப்பறி
/
வாங்கல் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் அதிகரிக்கும் வழிப்பறி
வாங்கல் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் அதிகரிக்கும் வழிப்பறி
வாங்கல் சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் அதிகரிக்கும் வழிப்பறி
ADDED : ஏப் 14, 2025 07:07 AM
கரூர்: கரூர் நகரில் இருந்து வாங்கலுக்கு, பசுபதிபாளையம் ஐந்து பிரிவு வழியாக, சாலை செல்கிறது. அந்த வழியில் அரசு காலனி, சங்கரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களின் பிரிவு சாலைகள் உள்ளது. மேலும், வாங்கலில் காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக, நாமக்கல் மாவட்டம், மோகனுார் செல்ல இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், கரூர்-வாங்கல் சாலையில் போதுமான அளவில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், அப்பகுதியில் இரவு நேரத்தில் வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன. எனவே, கரூர்-வாங்கல் சாலையில், தேவையான இடத்தில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.