/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜன 10, 2025 01:30 AM
அரவக்குறிச்சி, : அரவக்குறிச்சியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதம் தேசிய சாலை பாதுகாப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரவக்குறிச்சியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, நேற்று நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணி, அரவக்குறிச்சி ஏ.வி.எம். கார்னர் வழியாக போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றது.
அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி பேரணியை துவக்கி வைத்தார். பேரணியின்போது, அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும், மது போதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். உதவி பொறியாளர் வினோத் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.