/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
சாலை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 24, 2024 01:10 AM
கரூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், உட்கோட்ட தலைவர் சுப்பிரமணி தலைமையில், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மாநில நெடுஞ்சாலை துறை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதி-யத்தில், 10 சதவீதம் ஆபத்து படி வழங்க வேண்டும், நிரந்தர பய-ணப்படி வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நிய-மனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாநில பொருளாளர் பாலசுப்பிரமணி, உட்-கோட்ட துணைத்தலைவர் வெங்கடாசலம், இணை செயலா-ளர்கள் முருகேசன், சுப்பிரமணி, பொருளாளர் பால சுப்பிரம-ணியன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி பொன்
ஜெயராம் உள்பட, பலர் பங்கேற்றனர். * குளித்தலை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணி-யாளர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம் சார்பில், அரசை கண்-டித்து ஆர்ப்பாட்டம்
நடைபெற்றதுநெடுஞ்சாலைத்துறை உபகோட்ட தலைவர் மற்றும் மாவட்ட துணை தலைவரான பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, மாவட்ட உப தலைவர் மகேந்திரன், இணை செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சாலை பணியாளர் சங்க பொருளாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.சாலை பணியாளர்களின், 41 மாத பணி நீக்கம் காலத்தை பணிக்-காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்-றது.