ADDED : அக் 21, 2024 07:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கும் குப்பையை, வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று தரம் பிரிக்கப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பையை, அந்தந்த பகுதிகளில சாலையோரமே கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் சாலையில் புகை மண்டலம் உருவாகி வாகன ஓட்டிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
சில நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கரூர், மதுரை - சேலம் பைபாஸ் சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடக்கிறது. இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை சாலையோரம் எரிக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.