/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அய்யர்மலையில் இன்று முதல் ரோப்கார் மீண்டும் செயல்படும்
/
அய்யர்மலையில் இன்று முதல் ரோப்கார் மீண்டும் செயல்படும்
அய்யர்மலையில் இன்று முதல் ரோப்கார் மீண்டும் செயல்படும்
அய்யர்மலையில் இன்று முதல் ரோப்கார் மீண்டும் செயல்படும்
ADDED : செப் 09, 2025 01:30 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரிஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அய்யர்மலை மலைக்கோவில், 1,017 படிகளை கொண்டது. பக்தர்கள், கோவில் குடிப்பாட்டுக்காரர்களின் கோரிக்கையை ஏற்று, ரோப்கார் (கம்பி வடஊர்தி) வசதி கொண்டு வரப்பட்டது.
ரோப்கார் அமைக்கப்பட்டு, ஓராண்டு நிறைவு பெற்றதால் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது. அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர், மீண்டும் பயன்பாட்டுக்கு விட அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் தங்கராஜி கூறுகையில், ''கடந்த ஆகஸ்ட் மாதம் ரோப்காரின் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டது. பக்தர்கள் சேவைக்கு ஆய்வு குழுவின் அதிகாரிகள் ஒப்புதல் வழங்கினர். அதன்படி 9ம் தேதியில் இருந்து (இன்று) பக்தர்கள் சேவைக்கு இயங்கப்படுகிறது. தினமும் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை ரோப்கார் செயல்படும். ஒரு நபருக்கு மலைக்கு சென்று வர கட்டணம் 100 ரூபாய்,'' என்றார்.