/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூன்று சாலை பிரிவில் ரவுண்டானா அவசியம்
/
மூன்று சாலை பிரிவில் ரவுண்டானா அவசியம்
ADDED : அக் 16, 2025 01:11 AM
அரவக்குறிச்சி, அதிகளவில் வாகனங்கள் சென்று வருவதால், விபத்துகளை தவிர்க்க புன்னம்சத்திரத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.
கரூரிலிருந்து ஈரோடு செல்லும் சாலையில் புன்னம்சத்திரம் உள்ளது. இப்பகுதியில் வேலாயுதம்பாளையம் டி.என்.பி.எல்., காகித ஆலை, நாமக்கல் மாவட்டம் வேலுார், ஈரோடு மாவட்டம் கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. மேலும் இப்பகுதியில் ஹோட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த இடத்தில் ரவுண்டானா இல்லாததால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது.
எனவே, புன்னம் சத்திரம் மூன்று சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.