/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிராம சாலை மோசம்:வாகன ஓட்டிகள் அவதி
/
கிராம சாலை மோசம்:வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 15, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் அடுத்த பாப்பகாப்பட்டி முதல் கோடங்கிப்பட்டி வரை கிராம சாலை உள்ளது. இந்த சாலை வழியாக மக்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனர். தற்போது, பாப்பகாப்பட்டி முதல் கோடங்கிப்பட்டி, இரும்பூதிப்பட்டி பிரிவு சாலை பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது.
இதனால் இந்த சாலை வழியாக மக்கள் வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மக்கள் செல்லும்போது நிலை தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சாலையை புதுப்பிக்க, பஞ்., யூனியன் நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.