/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சி வார்டுகளில் சபா கூட்டம்
/
கரூர் மாநகராட்சி வார்டுகளில் சபா கூட்டம்
ADDED : அக் 28, 2025 01:22 AM
கரூர், கரூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, 48 வார்டுகளிலும் கவுன்சிலர் தலைமையில், சிறப்பு வார்டு சபா கூட்டம் நடந்தது.
கரூர் மாநகராட்சியில், 24 வார்டு சபா கூட்டம் நடந்தது. மண்டல தலைவர் அன்பரசன் தலைமை வகித்தார். இங்கு மக்களின் அடிப்படை தேவை, சாலையோரங்களில் மரக்கன்று நட்டு பராமரித்தல், மழைநீர் வடிகால் துார்வாருதல், அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம், மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. வார்டு மக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, 48 வார்டுகளிலும் இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் தலைமையில், சிறப்பு வார்டு சபா கூட்டம் நடக்கிறது.
கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றி, 'முதல்வரின் முகவரி மனு' என்ற அரசின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

