/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : அக் 28, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், தென்னிலை அருகே, பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், தென்னிலை கருநெல்லிவலசு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் அஜித்குமார், 28; இவர், நேற்று முன்தினம் பஜாஜ் பல்சர் பைக்கில், தென்னிலை-கோடந்துார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பைக் திடீரென நிலை தடுமாறியதில் கீழே விழுந்த அஜித்குமார், தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அஜித்குமாரின் தாய் ராணி, 50; கொடுத்த புகாரின்படி, தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

