/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சம்பா சாகுபடி பணி மும்முரம் நாற்றங்கால் தயாரிப்பில் விவசாயிகள் தீவிரம்
/
சம்பா சாகுபடி பணி மும்முரம் நாற்றங்கால் தயாரிப்பில் விவசாயிகள் தீவிரம்
சம்பா சாகுபடி பணி மும்முரம் நாற்றங்கால் தயாரிப்பில் விவசாயிகள் தீவிரம்
சம்பா சாகுபடி பணி மும்முரம் நாற்றங்கால் தயாரிப்பில் விவசாயிகள் தீவிரம்
ADDED : ஆக 13, 2025 05:38 AM
கரூர்: நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடி மேற்கொள்ள நாற்றங்கால் தயாரிப்பு மற்றும் உழவுப்பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடு-பட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும், 36 ஆயிரத்து, 700 ஏக்கர் நெல் சாகுபடி நடக்கிறது. அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்தாலும், இங்கு பாசனத்திற்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைவு என்பதால், பெரும்பாலும் காவிரி ஆற்று பாசன பகுதிகளிலேயே சம்பா சாகுபடி நடக்கிறது. பல ஆண்டுகளாக உரிய நேரத்தில் தண்ணீர் திறக்காது காரணமாக மாற்று பயிர் சாகு-படி சென்று விட்டனர். இதனால், சம்பா சாகுபடி பரப்பு, மெல்ல, மெல்ல சரிந்து வந்தது. ஆனால், நடப்பு ஆண்டில் மேட்டூரில் உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் இலக்கை மிஞ்சும் அளவில் சம்பா சாகுபடி நடக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.இதுகுறித்து, வேளாண் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்-டத்தில், காவிரி ஆற்றுநீரை மட்டுமே நம்பி சாகுபடி நடப்பதால், 90 சதவீதம் சம்பா பருவ காலங்களில், நெல் பயிரிடப்
படுகிறது. கோடை மழையில், 10 சதவீதம் நெல் சாகுபடி நடக்கும். இந்த ஆண்டு ஜூன், 12 முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணை, 110 அடிக்கு மேலாக இருந்து வருகிறது. சம்பாவுக்கு தட்டுப்பாடு இல்லாமல் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் நெல் சாகுபடியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணராயபுரம், குளித்தலை, தோகைமலை, தான்தோன்றிமலை ஆகிய பகுதியில் டிராக்டர் மூலம் நிலத்தை உழும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெற்பயிர் நடவு செய்வதற்கு தேவையான நாற்றங்கால் தயாரிப்பு பணியில் ஈடுபடு-கின்றனர். நாற்றங்கால் பயிர் வளர்ந்தவுடன், பயிர் பறிக்கப்பட்டு விளை நிலங்களில் நடவு செய்யப்படும். கடந்த ஆண்டு அரசு நிர்-ணயம் செய்த இலக்கை விட, 36,324 ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்தது. இந்த ஆண்டும், 35,830 ஏக்கர் என்ற அரசின் இலக்கை விட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர், தெரி-வித்தார்.