/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4க்கு மாதிரி தேர்வு
/
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4க்கு மாதிரி தேர்வு
ADDED : ஜன 25, 2024 10:29 AM
கரூர்: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான மாதிரி தேர்வில், மாணவ, மாணவியர், 144 பேர் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட மைய நுாலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 (வி.ஏ.ஒ.,) போட்டித் தேர்வுக்கான பயிற்சி நடத்தப்படுகிறது.
தேர்விற்குத் தேவையான பாடங்கள் மற்றும் பகுதிகளைக் கண்டறிய வைக்கும் திறனை மேம்படுத்துதல், தேர்வுகளுக்கு ஏற்ப சமீபகால நிகழ்வுகளை கண்டறிந்து படித்தல் ஆகிய முறையில் பயிற்சி வழங்கப்படும்.
பாட வாரியாக அலகுத்தேர்வு, திருப்புதல் தேர்வு மற்றும் பயிற்சித் தேர்வு நடத்தப்படும். இதன் அடிப்படையில், ஜன., 20 ல் முதற்கட்டமாக குரூப் 4 (வி.ஏ.ஒ.,) மாதிரி தேர்வில், மாணவ மாணவியர். 270 பேர் மாதிரி போட்டித் தேர்வு எழுதினர். தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்டமாக மாதிரி தேர்வு நடந்தது.
இதில், மாவட்ட மைய நுாலகத்தில்,- 90 பேரும், குளித்தலை - கிளை நுாலகத்தில், 25 பேரும், கிருஷ்ணராயபுரம் -கிளை நுாலகம், 20 பேரும் அரவக்குறிச்சி கிளை நுாலகத்தில், 9 பேரும் என மொத்தம், 144 பேர் தேர்வு
எழுதினர்.