ADDED : ஆக 28, 2026 06:59 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர்
மாவட்டம் தளவாபாளையம் அருகே, தோட்டக்குறிச்சி காவிரி ஆற்றுக்குள்
மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி,
வேலாயுதம்பாளையம் போலீசார், காவிரி ஆற்று பகுதியில் சோதனை
நடத்தினர். அப்போது நான்கு பேர், மணல் மூட்டைகளை, சரக்கு ஆட்டோவில்
ஏற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் சரக்கு ஆட்டோவை
மணலுடன் அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.பின், மணலுடன் கூடிய சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் விசாரணை நடத்தி, தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த கோபால், ராஜேஷ், கண்ணன், ரமேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
