ADDED : ஆக 28, 2026 06:58 AM
கரூர்:கரூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவின் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.
டாஸ்மாக்
தொழிற்சங்க நிர்வாகி ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தார். அனைத்து டாஸ்மாக்
கடை ஊழியர்களையும் பணிவரன் முறைப்படுத்திட வேண்டும். காலி
மதுபாட்டில் திரும்பப் பெறும் திட்டம் என்ற பெயரில், ஊழியர்களுக்கு
வேலைப்பளு கொடுப்பதை கைவிட வேண்டும். டாஸ்மாக் ஊழியர்ளுக்கு காலமுறை
ஊதியம் வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் பணியாற்றும்
ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில்
திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுப்ரமணியன், அண்ணாவேலு, சுடர்வளவன் உள்பட பலர் பங்கேற்றனர்.
