ADDED : மே 08, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம் : லாலாப்பேட்டை, மேம்பாலம் சாலையின் கீழ்புறம் கோழி கழிவுகள் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பழைய நெடுஞ்சாலை அருகில் ரயில்வே மேம்பாலம் உள்ளது.
இதன் கீழ்புறம் அதிகமான குப்பை மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தெரு நாய்கள் கழிவுகளுடன் சுற்றி திரிகிறது. சில நேரம் அந்த வழியாக செல்பவர்களை துரத்துகிறது. எனவே, மேம்பாலம் கீழ்புறம் கழிவுகள் கொட்டாமல் இருக்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

