தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரத்தில் துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணராயபுரத்தில் துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணராயபுரத்தில் துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 10, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலகம் முன், துாய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து வரும், துாய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம், 5,200 ரூபாய் வழங்க வேண்டும். கிராம பஞ்சாயத்துகளில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு, 6,040 ரூபாய் வழங்க வேண்டும். பணி காலத்தில் இறந்த ஊழியர்களுக்கு குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய காப்பீட்டு தொகை வழங்கிட கால வரம்பை நீர்ணயம் செய்திட வேண்டும்.மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த துாய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊழியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். காப்பீடு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோாரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளளர் சுப்பிரமணியன், பொருளாளர் கணேசன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us