/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜூன் 13, 2025 01:55 AM
குளித்தலை, குளித்தலை நகராட்சியில், துாய்மை பணியில் ஈடுபட்டுள்ள தற்காலிக பணியாளர்கள், கூடுதல் சம்பளம் கேட்டு பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சியில் துாய்மை பணியில், தற்காலிக பணியாளர்கள், 40 பேர் ஈடுபட்டுள்ளனர். தினசரி பிடித்தம் போக, 400 ரூபாய் வழங்கி வந்தனர். முசிறி நகராட்சி மற்றும் மருதுார், நங்கவரம் டவுன் பஞ்சாயத்தில் தினசரி, 700 ரூபாய் வழங்கி வருகின்றனர். எங்களுக்கும் கூடுதலாக சம்பளம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி, மூன்று நாட்களாக பணியை புறக்கணித்து, நகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகராட்சி கமிஷனர் நந்தகுமார் பேச்சுவார்த்தை நடத்தி, தினசரி, 450 ரூபாய் வழங்குவதாக கூறியதையடுத்து, துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.