/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய அளவில் டென்னிஸ் போட்டி சங்கரா வித்யாலயா மாணவர்கள் தேர்வு
/
தேசிய அளவில் டென்னிஸ் போட்டி சங்கரா வித்யாலயா மாணவர்கள் தேர்வு
தேசிய அளவில் டென்னிஸ் போட்டி சங்கரா வித்யாலயா மாணவர்கள் தேர்வு
தேசிய அளவில் டென்னிஸ் போட்டி சங்கரா வித்யாலயா மாணவர்கள் தேர்வு
ADDED : ஆக 13, 2025 06:28 AM
கரூர்: தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிக்கு, கரூர் சங்கரா வித்-யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.
சி.பி.எஸ்.இ., கிளஸ்டர் மண்டல மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த ஜூனில், சேலம் மாவட்டத்தில், கிளஸ்டர் டென்னிஸ் ஒற்றையர், இரட்டையர் போட்டி நடந்தது. இதில், கரூர், சின்ன ஆண்டாங்-கோவில் ஸ்ரீசங்கரா வித்யாலயா பள்ளியை சேர்ந்த, 7ம் வகுப்பு மாணவர் ஜெகன் ரோகித், ஒற்றையர், இரட்டையர் போட்டிகளில் வெற்றிபெற்று, தேசிய போட்டியில் விளையாட தேர்வாகி உள்ளார்.இதேபோல், கடந்த ஜூலையில், திருச்சியில் நடந்த போட்டியில், 8ம் வகுப்பு மாணவர் யுகந்தர், 6ம் வகுப்பு மாணவர் ரிதன் ஆதித்யா ஆகிய இருவரும், தேசிய அளவிலான இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர். இந்த மாணவர்கள், வரும் செப்., 23ல் ஹரியானா மாநிலத்திற்கு சென்று விளையாட உள்ளனர். தேர்வான மாணவர்-களை, பள்ளி நிறுவனர் பழனிசாமி, தாளாளர் அசோக் சங்கர், செயலாளர் ஆனந்த் சங்கர், பள்ளி முதல்வர் காமேஸ்வர
ராவ் ஆகியோர் பாராட்டினர்.