/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாந்தப்பாடி மதுரை வீரன் ஆலய கும்பாபிஷேக விழா
/
சாந்தப்பாடி மதுரை வீரன் ஆலய கும்பாபிஷேக விழா
ADDED : செப் 17, 2024 07:43 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, சாந்தப்பாடி குட்டக்கார கருப்பண்ணசாமி, மதுரை வீரன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
அரவக்குறிச்சி அருகே சாந்தப்பாடி பகுதியில் விநாயகர், கன்னிமார், வீரமாத்தி அம்மன், நாகம்மாள், அங்காளம்மன், குட்டக்கார கருப்பசாமி, மதுரை வீரன் சுவாமி ஆலய கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஆலயம் அருகே யாக குண்டங்கள் அமைத்து, காவிரி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கலசத்திற்கு துாப தீபங்கள் காண்பிக்கப்பட்ட பிறகு, மேளதாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் புனித நீரை தலையில் சுமந்து, கோவிலை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை விமர்சையாக நடத்தினர். தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
பின் கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்ற பின், பொதுமக்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

