/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கல்

ADDED : அக் 07, 2025 01:04 AM
கரூர், கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நேற்று மாணவ, மாணவியருக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
கரூர் மாவட்டத்தில் காலாண்டு தேர்வு முடிந்ததும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்த நிலையில் நேற்று பள்ளி கள் திறக்கப்பட்டன. தமிழக அரசு சார்பில், இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கரூர் மாவட்டத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இங்குள்ள, 881 பள்ளிகளில், 1 முதல்,
8 ம் வகுப்பு வரை, 52,058 மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டன.
மேலும் இரண்டாம் பருவ பாட புத்தகங்கள், பயிற்சி நோட்டுகள், மாணவர் களுக்கு வழங்கப்பட்டது.