/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சியில் நாய் தொல்லை அதிகம் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
/
மாநகராட்சியில் நாய் தொல்லை அதிகம் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
மாநகராட்சியில் நாய் தொல்லை அதிகம் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
மாநகராட்சியில் நாய் தொல்லை அதிகம் கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தல்
ADDED : அக் 07, 2025 01:05 AM
கரூர், கரூரில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
கரூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண, அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் கவிதா தலைமை வகித்தார். முதலில், கரூர் த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த, 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின், விவாதத்தில் கவுன்சிலர்கள் பேசிய விபரம்:
தினேஷ்குமார் (அ.தி.மு.க., கவுன்சிலர்): கரூர் பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள மாநகராட்சி சொந்தமான கடைகளுக்கு, வைப்பு தொகை குறைக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே கடை நடத்தி வருபவர்களுக்கு பொருந்துமா. அவர்களின் வைப்பு தொகை திருப்பி கொடுக்கப்படுமா.
மேயர் கவிதா: புதிதாக டெண்டர் விடும் கடைகளுக்கு மட்டுமே வைப்பு தொகை குறைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு பொருந்தாது.
ராஜா (3ம் மண்டல தலைவர் தி.மு.க.,): கரூர் மாநகராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கட்டுப்படுத்த நடவடிக்கை உண்டா.
மேயர் கவிதா: அரசு காலனியில் நாய்களுக்கு கு.க., செய்ய கருத்தடை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி பணியாளர்களுக்கு நாய்களை பிடிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
கமிஷனர் சுதா: உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி, நோய் பாதிக்கப்பட்ட நாய்களை மட்டுமே பிடித்து அப்புறப்படுத்த முடியும். மற்ற நாய்களுக்கு கு.க., மட்டுமே செய்ய முடியும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
சாதாரண கூட்டத்தில், 59 தீர்மானங்களும், அவசர கூட்டத்தில், 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன