/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவத்துார் உயர்நிலைப்பள்ளியில் சாரண, சாரணியருக்கு பயிற்சி
/
மாவத்துார் உயர்நிலைப்பள்ளியில் சாரண, சாரணியருக்கு பயிற்சி
மாவத்துார் உயர்நிலைப்பள்ளியில் சாரண, சாரணியருக்கு பயிற்சி
மாவத்துார் உயர்நிலைப்பள்ளியில் சாரண, சாரணியருக்கு பயிற்சி
ADDED : அக் 25, 2025 01:30 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மாவத்துார் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில், சாரண சாரணியருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் நல ஆணையர், கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோரின் உத்தரவின்படி நடந்த பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் அருள்முருகன் தலைமை வகித்தார். ஆசிரியர்கள் சுப்பிரமணியன், சக்திவேல், பிரேமலதா, பழனிசாமி, சிறப்பு ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி, கிரிஜாதேவி ஆகியோர் பங்கேற்றனர்.
தலைமை ஆசிரியர் அருள்முருகன் பேசுகையில்,''சாரணர் இயக்கத்தை, 1907ம் ஆண்டு பேடன் பவல் என்பவர் இங்கிலாந்தில் உருவாக்கினார். 1908 ஜன., 24ல் ஆண்கள் சாரணியர் குழுவை உருவாக்கினார். குழந்தை பருவத்தில் இருந்தே கீழ்படிதல், பெரியோரை மதித்து நடத்தல் ஆகிய நல்ல பண்புகளை வளர்க்கும் இயக்கமாக சாரணர் இயக்கம் தோன்றியது,'' என்றாார்.
மாவட்ட சாரணர் பயிற்சி ஆசிரியர்கள் கிருஷ்ணமூர்த்தி, சர்மிளா ஆகியோர் பயிற்சி அளித்தனர். சாரண ஆசிரியர் பழனிசாமி நன்றி கூறினார்.

