/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கியுள்ள பயணியர் மாளிகைக்கு பாதுகாப்பு
/
சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கியுள்ள பயணியர் மாளிகைக்கு பாதுகாப்பு
சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கியுள்ள பயணியர் மாளிகைக்கு பாதுகாப்பு
சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கியுள்ள பயணியர் மாளிகைக்கு பாதுகாப்பு
ADDED : அக் 24, 2025 01:24 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகையில், சி.பி.ஐ., அதிகாரிகள் தங்கியுள்ளதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த, 17 முதல், சி.பி.ஐ., எஸ்.பி., பிரவீன்குமார் தலைமையில் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தங்கியுள்ளனர்.
தற்போது, சி.பி.ஐ., போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்பட இரண்டு பேர் மட்டுமே பயணியர் மாளிகையில் தங்கியுள்ளனர். அங்கு, வெளிநபர்கள் வருவதை தடுக்கும் விதமாக, துப்பாக்கி ஏந்திய உள்ளூர் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.