/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடோன்களில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல்
/
குடோன்களில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல்
குடோன்களில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல்
குடோன்களில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் பறிமுதல்
ADDED : மே 05, 2024 01:58 AM
அரவக்குறிச்சி: செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
பள்ளப்பட்டியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முனியராஜ் தலைமையிலான குழுவினர் குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாம்பழம் மற்றும் வாழைப்பழ குடோன்களில் செயற்கையாக பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சந்தைப்பேட்டை பகுதியிலுள்ள பழ குடோன்களில் மருந்துகள் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள், வாழைப்பழங்கள் கண்டறியப்பட்டன. இதில், 40 கிலோ மாம்பழங்கள், 500 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பள்ளப்பட்டி பகுதியில் உள்ள உரக்கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ரசாயனம் கலந்த பழங்கள் சாப்பிடுவதால் கண் சிவத்தல், அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற வியாதிகள் ஏற்படும் என எச்சரித்தனர். மேலும் பழங்களில் ரசாயனம் கலந்து உள்ளதா என சந்தேகம் ஏற்பட்டால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்க 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
வேளாண்மை துறை அதிகாரி கண்ணன், நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் இஸ்மாயில் ஆகியோர் குழுவாக ஆய்வு செய்தனர். இனிவரும் வாரங்களில், இந்த ஆய்வு தொடரும் எனவும் இதுபோன்று செயற்கை முறையில் பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.