/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏப்.,28ல் டென்னிஸ் பயிற்சிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
/
ஏப்.,28ல் டென்னிஸ் பயிற்சிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
ஏப்.,28ல் டென்னிஸ் பயிற்சிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
ஏப்.,28ல் டென்னிஸ் பயிற்சிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு
ADDED : ஏப் 13, 2025 04:50 AM
கரூர்: டென்னிஸ் பயிற்சிக்கு வீரர், வீராங்கனை தேர்வு ஏப்., 28ல் நடக்கிறது.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளை-யாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஸ்டார் அகாடமி என்ற மாவட்ட விளையாட்டு பயிற்சி மையம் தொடங்கப்படுகிறது.
இதில், டென்னிஸ் பயிற்சி வழங்கப்படுகிறது. 12 முதல், 21 வயது வரை உள்ள, தலா, 20 மாணவ, மாணவியர் என மொத்தம், 40 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும், தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு மாதத்தில், 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்குவதோடு, சிற்றுண்டி,பயிற்சி உப-கரணங்கள், விளையாட்டு சீருடைகள் போன்றவைகளும் வழங்கப்படும்.இதற்காக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேர்வு வரும், 28ல் நடக்கிறது. இம்மையத்தில், 50 வயதுக்குட்பட்ட டென்னிஸ் பயிற்சியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளருக்கு, 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக, 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும், 20க்குள் விண்ணப்-பிக்கலாம் அல்லது dsokarur@gmail.com என்ற இ-.மெயில் வாயி-லாக சமர்ப்பிக்கலாம். மேலும் விபரம் பெற, 7401703493 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.