/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
/
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தேர்வு
ADDED : பிப் 18, 2024 10:35 AM
கரூர்: தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, கரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல், வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
அதில், கரூர் மாவட்ட தலைவராக ராஜா, செயலாளராக ஜெயராஜ், பொருளாளராக தமிழரசி, துணைத்தலைவர்களாக செல்லமுத்து, சத்தியமூர்த்தி, உண்ணாமலை, துணை செயலாளர்களாக அருள் குழந்தை தேவதாஸ், சுப்பிரமணியன், யசோதா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் ஆணையாளராக தங்கபாசு, துணை தேர்தல் ஆணையாளராக கனகராஜா ஆகியோர் செயல்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு, அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சகிலா, கரூர் மாவட்ட செயலாளர் பொன் ஜெயராம், நாமக்கல் மாவட்ட தலைவர் கலைசெல்வன், செயலாளர் மாதேஷ் உள்பட பலர் வாழ்த்தி பேசினர்.