ADDED : டிச 02, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், காட்டூர், செக்கணம், எழுதியாம்பட்டி ஆகிய இடங்களில், விவ-சாயிகள் பரவலாக பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதில், விரிச்சிப்பூக்கள், சின்னரோஜா, செண்டுமல்லி ரக பூக்கள் அதிக-ளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விளைந்த பூக்களை பறித்து, கரூர், முசிறி, திருச்சி பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்க-ளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. விரிச்சிப்பூ கிலோ, 120 ரூபாய், சின்னரோஜா, 150, செண்டுமல்லி, 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.