/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிக பனிப்பொழிவால் கருகும் சேனைக்கிழங்கு பயிர்
/
அதிக பனிப்பொழிவால் கருகும் சேனைக்கிழங்கு பயிர்
ADDED : டிச 23, 2025 05:26 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில், அதிக பனிப்பொழிவு காரணமாக, சேனைக்கிழங்கு பயிர்கள் கருகியுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
சின்னதாராபுரம், தொக்குப்பட்டிபுதுார், தொக்குப்-பட்டி, சீரங்க கவுண்டனுார், ராஜபுரம், நஞ்சை காளக்குறிச்சி, வெங்கக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அமராவதி ஆற்று பாசனத்தின் மூலம், 50 ஏக்க-ருக்கு மேற்பட்ட பரப்பளவில் சேனைக்கிழங்கு பயிர் செய்துள்ளனர். நல்ல மகசூல் கிடைக்கும் சேனைக்கிழங்கு பயிர், விவசாயிகளுக்கு முக்-கிய வருமானமாக இருந்து வந்தது.ஆனால், இந்தாண்டு வழக்கத்தை விட அதிக-ளவில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனிப்பொ-ழிவால் சேனைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதி-காலை நேரங்களில் பெய்யும் அடர்ந்த பனியால், சேனைக்கிழங்கு செடிகளின் இலைகள் மற்றும் தண்டுகள் கருகி, செடிகள் முற்றிலும் பாதிக்கப்-பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த விவசாயி ராமசாமி கூறு-கையில், ''ஆண்டு தோறும் இந்த பகுதியில் சேனைக்கிழங்கு, பருத்தி பயிர்களை பிரதான-மாக பயிரிட்டு வருகிறோம்.
குறிப்பாக, சேனைக்கிழங்கு மூலம் ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வந்-தது. ஆனால் இந்தாண்டு வழக்கத்தை விட குளிர் மற்றும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் சேனைக்கிழங்கு செடிகள் முழுவதுமாக கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை, எவ்-வாறு காப்பாற்றுவது என்பது விவசாயிகளுக்கு பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது,'' என்றார்.

