/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் செப்டிக் டேங்க் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம்

ADDED : டிச 16, 2024 04:00 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த வைகை நல்லுார் பஞ்., கோட்டைமேடு கிரா-மத்தில் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி அருகே, விவசாய பாசன கன்னார் சென்று வருகிறது. மழைக்காலங்களில் விவசாய பகுதிகளிலும் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் வரும் மழைநீர் முழுவதும், பள்ளி வளாகத்திற்குள் செல்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்திலுள்ள கழிப்பறை செப்டிக் டேங்கில், மழைநீர் புகுந்ததால், கழிவுகள் அனைத்தும் வெளி-யேறி பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்-கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, பள்ளி மாணவ, மாணவியர் நலன் கருதி, மழைநீர் பள்ளி வளா-கத்திற்குள் வராதபடி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, மாமாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.