/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்ய சேவை மையம்
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்ய சேவை மையம்
ADDED : நவ 22, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டத்தில், வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய இன்றும், நாளையும் சேவை மையங்கள் அமைக்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. அதில், வழங்கப்பட்டு வரும் படிவங்களை பூர்த்தி செய்யும் வகையில், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சேவை மையங்கள் இன்றும், நாளையும் காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட உள்ளது. இதை வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

