/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம்
/
கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம்
ADDED : நவ 22, 2025 01:57 AM
கரூர், கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம், மாவட்ட செயலர் சுரேஷ் தலைமையில், சாமிநாதபுரம் கட்சி அலுவலகத்தில் நடந்தது.
அதில், வரும் சட்டசபை தேர்தலை கணக்கில் கொண்டு, உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும், கரூர் வெண்ணைமலையில் நீதிமன்ற தீர்ப்பை காட்டி, பொதுமக்களை மிரட்டும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும்,
கரூர் மாவட்டத்தில் உள்ள, நான்கு தொகுதிகளில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை முடக்கும் தி.மு.க., அரசு அதிகாரிகளை கண்டிப்பது, கரூர் மாவட்டத்தில் கொள்ளை சம்பவங்களை தடுக்க, இரவு நேர போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் மணி, மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்பு செயலர்கள் குணசீலன், கொங்கு குணா, வன்னியர் சங்க மாவட்ட செயலர் பசுபதி, கரூர் மாநகர செயலர் ராக்கி முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

