/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைநீர் செல்லும் வடிகால் கால்வாயில் கடும் பாதிப்பு
/
மழைநீர் செல்லும் வடிகால் கால்வாயில் கடும் பாதிப்பு
மழைநீர் செல்லும் வடிகால் கால்வாயில் கடும் பாதிப்பு
மழைநீர் செல்லும் வடிகால் கால்வாயில் கடும் பாதிப்பு
ADDED : அக் 09, 2025 12:41 AM
கிருஷ்ணராயபுரம்பஞ்சப்பட்டி பஞ்சாயத்தில், மழைநீர் செல்லும் வடிகால் கால்வாயில் செடிகள் வளர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பஞ்சாயத்து சார்பில், மழை நீர் செல்லும் வடிகால் கால்வாய் பஞ்சப்பட்டி கடைவீதி பகுதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ளது.
கால்வாய் வழியாக மழை காலங்களில், சாலை வழியாக வரும் மழைநீர் வடிந்து செல்கிறது. தற்போது கால்வாய் முழுவதும் அதிகமான செடிகள் வளர்ந்துள்ளது.மேலும் கால்வாய் துார்வாராமல் இருப்பதால் கழிவுகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிகமான கொசுக்கள் பரவி வருகிறது.எனவே, கால்வாய் பகுதிகளில் வளர்ந்து வரும் செடிகளை அகற்றி, துார்வார வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.