/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆறாக ஓடும் கழிவு நீர்: பயணிகள் கடும் அவதி
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆறாக ஓடும் கழிவு நீர்: பயணிகள் கடும் அவதி
கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆறாக ஓடும் கழிவு நீர்: பயணிகள் கடும் அவதி
கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆறாக ஓடும் கழிவு நீர்: பயணிகள் கடும் அவதி
ADDED : அக் 29, 2024 01:08 AM
கரூர் பஸ் ஸ்டாண்டில் ஆறாக ஓடும்
கழிவு நீர்: பயணிகள் கடும் அவதி
கரூர், அக். 29-
கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள, கழிப்பிடத்தில் இருந்து கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால், பயணிகள் முகத்தை மறைத்து கொண்டு, செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
தென் மாநிலங்களின், நுழைவு வாயிலாக உள்ள கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு நாள்தோறும், 100 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கரூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பஸ் ஸ்டாண்டின் மையப்பகுதியில், இலவச கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
அதை பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். கழிப்பிடத்தில், இரவு நேரத்தில் விளக்குகள் எரிவது இல்லை. நாள்தோறும் சுத்தம் செய்வது இல்லை என்ற புகார் ஏற்கனவே உள்ளது. இந்நிலையில், கழிப்பிடத்தில் இருந்து கழிவு நீர், பஸ் ஸ்டாண்டில் மையப்பகுதியில் ஆறாக ஓடுகிறது. இதனால், பஸ் ஸ்டாண்டு க்கு செல்லும் பயணிகள் துர்நாற்றத்தால், மூகத்தை துணியால் மறைத்து கொண்டு செல்கின்றனர்.மேலும், கழிவுநீர் செல்லும் பகுதியில், தள்ளுவண்டியில் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பயணிகளுக்கு, விலையில்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தை நாள்தோறும் சுத்தம் செய்து, கழிவுநீர் வெளியே செல்லாத வகையில், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.