/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அக்ரஹாரத்தில் கழிவுநீர் வாய்க்கால் தேவை: பொது மக்கள் எதிர்பார்ப்பு
/
அக்ரஹாரத்தில் கழிவுநீர் வாய்க்கால் தேவை: பொது மக்கள் எதிர்பார்ப்பு
அக்ரஹாரத்தில் கழிவுநீர் வாய்க்கால் தேவை: பொது மக்கள் எதிர்பார்ப்பு
அக்ரஹாரத்தில் கழிவுநீர் வாய்க்கால் தேவை: பொது மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 02, 2024 11:46 AM
கரூர்: கரூர் அருகே, சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் வசதியை செய்து தர வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் தார் சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது. ஆனால், போதிய சாக்கடை வாய்க்கால் இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் ஓடிய வண்ணம் உள்ளது.
மேலும், அமராவதி ஆற்றின் கரையோர பகுதிகளில் இருந்து, சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள போர்வெல் குழாய்களில் இருந்து, தண்ணீர் லாரிகளில் ஏற்றப்பட்டு, அக்ரஹாரம் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இதனால், சாலைகள் சேதமடைகிறது. சில இடங்களில் மட்டும், சாக்கடை கழிவுநீர் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது.
எனவே, பெரிய ஆண்டாங்கோவில் அக்ரஹாரம் பகுதியில் முழுவதுமாக, புதிதாக சாக்கடை கழிவு நீர் வாய்க்கால்களை கட்டித்தர, ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்., மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.