ADDED : அக் 01, 2026 02:56 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கனகபுரியில் பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும்.
அரவக்குறிச்சி கனகபுரி பகுதியில், ஏராளமான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மாணவர்கள், கூலி வேலை செய்வோர், வேலை நிமித்தமாக அரவக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ்களில் பயணம் செய்து
வருகின்றனர். ஆனால், இப்பகுதியில் பயணிகள் நிழற்கூடம் இல்லாததால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். வெயில், மழையில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், சாலையோ-ரத்தில் நின்று கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. குறிப்-பாக முதியவர்கள், பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கனகபுரி பஸ் நிறுத்தம் பகுதியில், பயணிகள் நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்-றனர்.
