/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவாயம், அய்யர்மலை கோவில் புனரமைப்பு பணிக்கு அடிக்கல்
/
சிவாயம், அய்யர்மலை கோவில் புனரமைப்பு பணிக்கு அடிக்கல்
சிவாயம், அய்யர்மலை கோவில் புனரமைப்பு பணிக்கு அடிக்கல்
சிவாயம், அய்யர்மலை கோவில் புனரமைப்பு பணிக்கு அடிக்கல்
ADDED : மார் 08, 2024 07:14 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, ஹிந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ், தொன்மை வாய்ந்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில்களை புனரமைத்து, கும்பாபிஷேக விழா நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து தொல்லியல் துறையினர் கோவில்களை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளித்தனர். அதன் பிறகு தமிழக அரசு கும்பாபிஷேக விழா நடத்த ஆணை பிறப்பித்தது. அதன்படி நேற்று, 1.10 கோடி ரூபாய் மதிப்பில் அய்யர்மலை ரத்தகிரீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிக்கும், சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலுக்கு, 1.95 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. எம்.எல்.ஏ., மாணிக்கம் அடிக்கல் நாட்டினார்.
சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவிலில், 18 ஆண்டுகளுக்கு முன்பும், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில், 16 ஆண்டுகளுக்கு முன்பும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், முன்னாள் அறங்காவல் குழு தலைவர் முருக கணபதி, மாவட்ட பஞ்., குழு துணைத்தலைவர் தேன்மொழதியாகராஜன், ஒன்றிய செயலர்கள் சந்திரன், தியாகராஜன் மற்றும் தி.மு.க.,நிர்வாகிகள், கோவில் குடிப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

