/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கந்தன்குடி கிராம சாலையில் புதர் செடிகள் ஆக்கிரமிப்பு
/
கந்தன்குடி கிராம சாலையில் புதர் செடிகள் ஆக்கிரமிப்பு
கந்தன்குடி கிராம சாலையில் புதர் செடிகள் ஆக்கிரமிப்பு
கந்தன்குடி கிராம சாலையில் புதர் செடிகள் ஆக்கிரமிப்பு
ADDED : நவ 21, 2025 01:48 AM
கிருஷ்ணராயபுரம், கந்தன்குடி கிராம சாலையின் இருபுறமும், அதிகமான செடிகள் வளர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து பகுதியில் இருந்து, கந்தன்குடி வரை கிராம சாலை செல்கிறது. இதன் வழியாக இரும்பூதிப்பட்டி பகுதியில் இருந்து, சிவாயம் வரை மக்கள் பயணிக்கின்றனர். தார்ச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலை இருபுறமும் அதிகமான புதர் செடிகள் வளர்ந்து, சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாலை வழியாக டூவிலர் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையின் இருபுறமும் வளர்ந்து வரும் புதர் செடிகளை வெட்டி அகற்ற, பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.