/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'எதிர்பார்த்த காலண்டர் ஆர்டர் கிடைக்கல' கவலையில் சிவகாசி தயாரிப்பாளர்கள்
/
'எதிர்பார்த்த காலண்டர் ஆர்டர் கிடைக்கல' கவலையில் சிவகாசி தயாரிப்பாளர்கள்
'எதிர்பார்த்த காலண்டர் ஆர்டர் கிடைக்கல' கவலையில் சிவகாசி தயாரிப்பாளர்கள்
'எதிர்பார்த்த காலண்டர் ஆர்டர் கிடைக்கல' கவலையில் சிவகாசி தயாரிப்பாளர்கள்
ADDED : செப் 26, 2024 03:17 AM
'எதிர்பார்த்த காலண்டர் ஆர்டர் கிடைக்கல'கவலையில் சிவகாசி தயாரிப்பாளர்கள்
கரூர், செப். 26-கரூர் மாவட்டத்தில் இருந்து, எதிர்பார்த்த அளவில் வரும், 2025 ஆண்டுக்கான காலண்டர் ஆர்டர்கள் வரவில்லை என, தயாரிப்பாளர்கள், ஏஜென்ட்கள் கவலையில் உள்ளனர்.கரூர் மாவட்டத்தில் ஜவுளி தொழில், கொசு வலை உற்பத்தி மற்றும் பஸ் பாடி கட்டும் தொழில் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் மாதத்திலேயே விருது நகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து மாத காலண்டர், தினசரி காலண்டர் மற்றும் டைரி தயாரிப்பாளர்கள், ஏஜென்ட்கள், கரூர் மாவட்டத்தில், முகாமிட்டு ஆர்டர் பெறுவது வழக்கம். ஆனால் கடந்த, 2020- கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தொழில்கள் முடங்கியதால் காலண்டர், டைரி தயாரிக்க புதிய ஆர்டர்கள் அதிகளவில் வரவில்லை. இந்நிலையில், நடப்பாண்டு நுால் விலை உயர்வு, புதிய பஸ்கள் பாடி கட்ட அதிகம் வராத காரணம், கொசுவலைக்கு குறைந்த ஆர்டர் காரணமாக, 2025ம் ஆண்டுக்கான காலண்டர், டைரிக்கு புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவில் வரவில்லை என, தயாரிப்பாளர்கள், ஏஜென்ட்கள் புலம்பு கின்றனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:சிவகாசியில் தயாரிக்கப்படும் காலண்டர்களுக்கு தமிழகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் மவுசு உண்டு. மேலும், கிழக்கு ஆசியா மற்றும் மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் தமிழர்களும், சிவகாசி காலண்டர்களை விரும்பி வாங்குவர். இதனால், ஒவ்வொரு ஆகஸ்ட் மாதத்தில், ஆடி, 18 ல் ஆடிப் பெருக்கின் போது, மாதிரி காலண்டர் ஆல்பம் வெளியிடப்பட்டு, ஆர்டர் பெற்று அச்சடிப்பு பணி துவங்கும். ஆனால், நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில், தொழில் நசிவு காரணமாக வரும், 2025 ஆண்டுக்கான மாதிரி காலண்டர் ஆல்பத்தை, கடந்த ஆடிப் பெருக்கு நாளில் வெளியிட முடியவில்லை. மேலும், ஏற்கனவே கடந்தாண்டு காலண்டர்கள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்தவர்கள், நடப்பாண்டு, தொழில் முடக்கம் காரணமாக ஆர்டர் கொடுக்க தயங்குகின்றனர். தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் மட்டுமல்ல பிற மாநிலங்களில் இருந்தும், வாடிக்கையாளர்களுக்கு காலண்டர் வழங்க, ஜவுளி கடைகள், நகை கடைகள் மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஆர்டர் வரும். ஆனால், நடப்பாண்டு, 40 சதவீதம் வரை மட்டுமே ஆர்டர்கள் வந்துள்ளது. இதனால், சிவகாசியில் காலண்டர்கள், டைரிகள் அச்சிடும் பணி மந்தமாக நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் நிலை உருவாகும்.இவ்வாறு கூறினர்.

