/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திறன் இயக்க பயிற்சி முகாம்
/
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திறன் இயக்க பயிற்சி முகாம்
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திறன் இயக்க பயிற்சி முகாம்
ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் திறன் இயக்க பயிற்சி முகாம்
ADDED : ஜூன் 03, 2025 01:08 AM
கரூர், கரூர் மாவட்டம். மாயனுாரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் திறன் இயக்க பயிற்சி முகாம் நடந்தது.
பயிற்சி நிறுவன முதல்வர் ராஜ்குமார் தொடங்கி வைத்தார். துறைத்தலைவர் பெரியசாமி பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். கருத்தாளர்களாக ஜெகதீஸ்வரி, செல்வராணி, புவனேஷ்வரி ஆகியோர் செயல்பட்டனர். மாவட்டத்தில், 8 ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர். இவர்கள், 1 முதல் முதல், 8 ம் வகுப்பு வரையிலான அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உள்ளனர்.
நிகழ்ச்சியில், விரிவுரையாளர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.