தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை முதல் திறன்வார நிகழ்ச்சி துவக்கம்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை முதல் திறன்வார நிகழ்ச்சி துவக்கம்

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை முதல் திறன்வார நிகழ்ச்சி துவக்கம்


ADDED : ஜூலை 08, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:நாளை முதல் பல்வேறு இடங்களில், திறன்வார நிகழ்ச்சி நடக்கிறது என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, 15-ம் தேதி உலக இளைஞர் திறன் நாள் என்பதால், இரண்டாவது வாரத்தை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன்வாரமாக அனுசரிக்குமாறு, தமிழ்நாடு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு 9ம் தேதி முதல், 15ம் தேதி வரை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால், திறன் பயிற்சி தொடர்பான தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வழிகாட்டும் மையம் சார்பில், நாளை முதல், 15ம் தேதி வரை திறன்வாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இங்கு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்பயிற்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்

படவுள்ளது. வரும், 10ல் வாங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. 13ல் கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரியிலும், 14ல் கரூர் வள்ளுவர் அறிவியல் கல்லுாரி, 15ல் காணியாளம்பட்டி அரசினர் பாலிடெக்னிக், கரூர் வெண்ணெய்மலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஆகிய இடங்களில் திறன் பயிற்சி குறித்தும், போட்டி தேர்வுகள் குறித்தும், பல்வேறு பயனுள்ள வலைதளங்கள் குறித்தும், பல்துறை வல்லுநர்கள் பேசவுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us