/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்
/
லாலாப்பேட்டை அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்
லாலாப்பேட்டை அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்
லாலாப்பேட்டை அரசு பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு வழங்கல்
ADDED : நவ 21, 2024 01:39 AM
கிருஷ்ணராயபுரம், நவ. 21-
லாலாப்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு, மா அறக்கட்டளை இணைந்து அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஸ்மார்ட் போர்டு, வீடியோ கான்பரன்ஸ் வசதி மற்றும் இரண்டு சானிட்டாரி நாப்கின் எரியூட்டிகள் வழங்கினர்.
பெரம்பலுார் எம்.பி., அருண்நேரு தலைமை வகித்தார். பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்டு, வீடியோ கான்பரன்ஸ் வசதி, இரண்டு சானிட்டரி நாப்கின் எரியூட்டிகள் வழங்கப்பட்டது, முன்னதாக இதற்கான விழா குத்து விளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. பெரம்பலுார் எம்.பி., அருண்நேரு பேசுகையில், '' மாணவர்கள் உயர்கல்விக்கு தேவையான அனைத்து நல திட்டங்களையும், அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முன்னேற்றம் அடைந்து, பெரிய பதவிகளுக்கு செல்ல முடியும். மேலும், தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,'' என்றார்.
குளித்தலை எம்.எல்,ஏ., மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் யூனியன் சேர்மன் சுமித்திராதேவி, கள்ளப்பள்ளி பஞ்சாயத்து தலைவர் சக்திவேல், தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன், பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமார், சமூக ஆர்வலர் கிருஷ்ணமாச்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

