/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்
/
தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்
தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்
தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்
ADDED : ஜூலை 15, 2025 01:17 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அமிர்தானந்தம், கண்களில் கறுப்பு துணி கட்டி, கையில் வைத்திருந்த தராசில் பணத்துடன் வந்து, தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் மற்றும் பலமுறை மனு அளித்து நடவடிக்கை இல்லை என கூறி, மனு அளிக்க வந்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்தில், முறைகேடு தொடர்பாக மனு அளித்து வருகிறேன். இதனால், எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு கோரி மாயனுார் போலீஸ் ஸ்டேஷனில் மனு அளித்து இருக்கிறேன். அதில், பல மாதங்களாக எந்த ஒரு விசாரணையும் செய்யாமல் மனு ரசீது தராமல் உள்ளனர். இது தொடர்பாக குளித்தலை டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தாலும், அது விசாரணையில், முன் விரோதம் காரணம் என்று பதில் அளித்து விடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்