/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமூக நலத்துறை பணியாளர் சங்க கரூர் மாவட்ட மாநாடு
/
சமூக நலத்துறை பணியாளர் சங்க கரூர் மாவட்ட மாநாடு
ADDED : ஆக 31, 2025 07:35 AM
கரூர்: கரூரில், தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்க, கரூர் மாவட்ட கிளை மாநாடு நேற்று அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடந்தது.
சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் வினோத் தலைமை வகித்தார். அதில், சமூக நலத்துறையில் முதுநிலை பட்டியல் தயா-ரித்து வெளியிட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து, நிலுவை தொகையை வழங்க வேண்டும், கண்காணிப்பாளர் பத-வியில் முதுநிலையை அடிப்படையாக கொண்டு, பதவி உயர்வு வழங்க வேண்டும், பாலின பாடுபாடு இல்லாமல் ஆண், பெண் இரு தரப்பினருக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும், பிரின்டர் மற்றும் இணையதள வசதிகள் செய்து தர வேண்டும் உள்பட பல்-வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.மாநில தலைவர் ரவி, துணைத் தலைவர் தினகரன், துணை பொதுச்செயலாளர்கள் வெற்றிவேல், ஆறுமுகம், மாவட்ட நிர்வா-கிகள் மகேந்திரன், ரபிக், ராஜூ உள்பட பலர் பங்கேற்றனர்.