sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூரிய சக்தி பம்பு செட் மானியம்: 72 பேருக்கு வழங்கல்

/

சூரிய சக்தி பம்பு செட் மானியம்: 72 பேருக்கு வழங்கல்

சூரிய சக்தி பம்பு செட் மானியம்: 72 பேருக்கு வழங்கல்

சூரிய சக்தி பம்பு செட் மானியம்: 72 பேருக்கு வழங்கல்


ADDED : ஜூலை 28, 2025 08:06 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: நான்கு ஆண்டுகளில், முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் மூலம், 72 விவசாயிக-ளுக்கு, 1.39 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்-டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, லாலாபேட்டையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள சூரிய சக்தி பம்பு செட்டுகளின் செயல்பாட்டை கலெக்டர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: முதல்வர் சூரிய சக்தி பம்பு செட் திட்டம் மூலம், மொத்த விலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி-யினர் பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிக-ளுக்கு, 80 சதவீதமும், பொது பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இதர விவசாயிகளுக்கு, 70 சதவீதமும், இதர விவசா-யிகளுக்கு, 60 சதவீதமும் மானியம் வழங்கப்படு-கிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில், நான்கு ஆண்டுகளில் முதல்வரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டம் மூலம், 72 விவசாயிகளுக்கு, 1.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மானியம் வழங்-கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இயந்திரமய-மாக்குதலுக்கான துணை இயக்க திட்டத்தின் மூலம் பல்வேறு வேளாண் இயந்திரங்களை விவசாயிகள் வாங்குவதற்கும், வேளாண் இயந்-திர வாடகை மையங்களை அமைப்பதற்கும் மானியமாக வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர் கலைச்செல்வி, உதவி இயக்-குனர்(ஊராட்சிகள்) சரவணன் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us