/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வஞ்சுலீஸ்வரர் கோவிலில் சோமவார விழா பூஜை கரூர், டிச. 10-
/
வஞ்சுலீஸ்வரர் கோவிலில் சோமவார விழா பூஜை கரூர், டிச. 10-
வஞ்சுலீஸ்வரர் கோவிலில் சோமவார விழா பூஜை கரூர், டிச. 10-
வஞ்சுலீஸ்வரர் கோவிலில் சோமவார விழா பூஜை கரூர், டிச. 10-
ADDED : டிச 10, 2024 02:07 AM
வஞ்சுலீஸ்வரர் கோவிலில் சோமவார விழா பூஜை
கரூர், டிச. 10-
கார்த்திகை மாத, நான்காவது சோம வாரத்தையொட்டி, விசாலாட்சி சமேத வஞ்சுலீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
கார்த்திகை மாதத்தில் திங்கள் கிழமையை, சோமவாரம் என அழைப்பதுண்டு. சோமன் என்றால் பார்வதியுடன் இணைந்திருக்கும், ஈஸ்வரன் என்பது பொருள். இதனால், ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில், திங்கள் கிழமையில், சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம்.
கரூர் உழவர் சந்தை அருகே உள்ள, விசாலாட்சி சமேத வஞ்சுலீஸ்வரர் கோவிலில், நான்காவது சோமவாரத்தையாட்டி, மூலவருக்கு சிறப்பு பூஜை, அபி ேஷகம் மற்றும் 108 சங்காபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது.
* கிருஷ்ணராயபுரம் அடுத்த, கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில் கருப்பத்துாரில் சிம்மபுரிஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இங்கு, கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சிவன் சிம்மபுரிஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன், முருகன், விநாயகருக்கு அபிேஷகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

