/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சொத்து தகராறில் தாயை தாக்கிய மகன் கைது
/
சொத்து தகராறில் தாயை தாக்கிய மகன் கைது
ADDED : டிச 09, 2024 07:03 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த செம்பியநத்தம் பஞ்., அரச கவுண்டனுார் கிராமத்தை சேர்ந்தவர் பெரியக்காள், 80; இவரது மகன் அர்ஜூனன், 54. இருவருக்கும், சொத்து பிரச்னையில் முன் விரோதம் இருந்தது. கடந்த, 6 மதியம், 12:30 மணிக்கு, பெரியக்காள் வீட்டில் இருந்தார். அப்போது, மகன் அர்ஜூனன், மருமகள் ஜக்கம்மாள், 48, உறவினர் சின்னமணி, 27, ஆகிய மூவரும், பெரியக்காளை தகாத வார்த்தையில் பேசி, தாக்கியுள்ளனர்.
காயமடைந்த பெரியக்காள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பெரியக்காள் கொடுத்த புகார்படி, அர்ஜூனன், ஜக்கம்மாள், சின்னமணி ஆகிய மூவர் மீதும் பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிந்து, அர்ஜூனனை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.